Friday, January 29, 2010

என்னவளின் பிறந்தநாள்!!!!!!!

என்னவளின் பிறந்தநாள்:


புத்தாடைகள் கிடைக்கும் என்று அந்நாளை என் வாழ்நாளில் எதிர்பார்த்து காத்து கிடந்தேன்
காத்தமைக்கு கிடைத்த ஆடைகள் பல
(பல என்றதும் என் வயதை தப்பாக கணக்கிட்டு கொள்ள வேண்டாம், யூத் என்று சொல்லும் வயதை தாண்டவில்லை)


வருடங்களை திரும்பிபார்கிறேன்
ஆடைகளில் பல பாழாகிவிட்டன (நான் வளர்ந்தது அப்படி:( )
எஞ்சியது வருத்தங்கள் மட்டுமே


இன்றும்
அதே புத்தாடை
அதே மகிழ்ச்சி
அதே பூரிப்பு
எல்லாம் என் மனைவியிடம்
என்னுள்ளும் ஒரு கொண்டாட்டம்
ஆம் இன்று என்னவளின் பிறந்தநாள்............


எங்கள் வாழ்வில் வந்த முதல் பாசப் பரிமாற்றம், பரிமாற்றிகொண்டோம்
இனி வருடங்கள் பல கடந்தாலும் வாழ்நாளை திரும்பிபார்க்கையில்
என் நினைவில் இருக்கபோவது என்னவளின் அளவிலடங்கா மகிழ்ச்சி மட்டுமே

ஏனெனில் அவள் மகிழ்ந்தது புத்தாடைக்கல்ல
அதனை வாங்கி கொடுத்தது நான் என்பதால்


புரிந்தது அவளது
ஏக்கம்
பாசம்
காதல்!!!!!!!!!!!!!!!


இன்று
என்னவளின் பிறந்தநாள்
என் பிறப்பின் அர்த்தம் புரிந்த நாள்

No comments:

Post a Comment